ம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் "சார்லி சாப்ளின்- 2.'

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார்.

Advertisment

கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார்.

முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, ரவிமரியா, ப. சிவா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Advertisment

thismonthrelease

ஒளிப்பதிவு- சௌந்தர்ராஜன், இசை- அம்ரீஷ், பாடல்கள்- யுகபாரதி, பிரபுதேவா, ஷக்தி சிதம்பரம், செல்ல தங்கையா, எடிட்டிங்- சசி, கலை- விஜய் முருகன், நடனம்- ஜானி, ஸ்ரீதர், ஸ்டண்ட- கனல் கண்ணன், தயாரிப்பு நிர்வாகம்- மகேந்திரன், தயாரிப்பு மேற்பார்வை- பரஞ்சோதி- திலீபன், இணைத் தயாரிப்பு- சந்திரசேகர், சரவணகுமார், தயாரிப்பு- ப. சிவா, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிறார் ஷக்தி சிதம்பரம்.

படம் பற்றி இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது...

""பிரபு தேவா மேட்ரிமோனியல் நிறுவனம் நடத்தும் வேடத்தில் நடிக்கிறார்.

நிக்கி கல்ராணி சமூக ஆர்வலராக நடிக்கிறார். பிரபு டாக்டராகவும், அதா சர்மா மனோ தத்துவ நிபுணராகவும் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு கோவா, கும்பகோணம், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றது.

இம்மாதம் 25-ஆம் தேதி படம் வெளியாகிறது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் கண்டிப்பாக ஹிட்டாகும்'' என்றார் நம்பிக்கையுடன்.